டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த பாராளுமன்ற கட்டுமானத்தை, சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம் செய்தது. சவப்பெட்டி மற்றும் புதிய பாராளுமன்றம் ஆகியவற்றின் படங்களை கட்சியின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. இதற்கு பாஜக பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நாட்டு மக்கள் 2024ல் உங்களை அதே சவப்பெட்டியில் புதைப்பார்கள். ஜனநாயகத்தின் புதிய கோவிலுக்குள் நுழைய உங்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். பாராளுமன்ற கட்டிடம் நாட்டுக்கே சொந்தம். சவப்பெட்டி உங்களுக்குத்தான் என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற திறப்பு விழா ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கிறது.
ஆர்ஜேடி போன்ற கட்சிகள் கதறுவதை குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். பாஜக தலைவரின் பதலடியைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் சக்தி சிங் யாதவ் தனது கட்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தங்கள் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்ட ட்வீட்டில் உள்ள சவப்பெட்டி படம், ஜனநாயகம் புதைக்கப்பட்டிருப்பதை பிரதிபலிப்பதாக கூறினார். இதற்கிடையே, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுஷில் மோடி கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *