ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் நகரம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர தலைவர் எஸ் கணேசன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளரும் நகர பார்வையாளருமான கே பி ரவி முன்னிலை வகித்தார் திருவாரூர் மாவட்ட மேலிடைப் பார்வையாளரும் செயற்குழு கூட்ட நகர பொறுப்பாளருமான பேட்டை சிவா பங்கேற்று நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கருத்துரை வழங்கி பேசினார்

இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன திருவாரூர் நகராட்சி நாள் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்துநகராட்சியின் தவறான செயல்பாடுகள் குறித்தும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நகரில் குப்பைகள் பராமரிப்பை நகராட்சி சரிவர பராமரிக்காமல் தவறான பதில்களை தந்து இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சூழ்நிலை உள்ளது

ஓடம்போக்கி ஆற்றினை சரியாக தூர் வாராமல் கூவும் நதியாக மாறி வரும் சூழ்நிலையில் இது பற்றி நகராட்சி நிர்வாகம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது பாலிதீன் குப்பைகளை கொண்டு ஆற்றை பூத்துக் கொண்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் நிறுவனத்திற்கு ஆதரவாக நகராட்சி ஆணையர் செயல்படுவது கோவில்கள் கடைகளாக மாற்றப்பட்டு வருவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதிய பேருந்து நிலையம்அவல நிலையை கண்டித்தும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்காக இன்று அர்ப்பணித்த பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் இந்திய திருநாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் சோழர்கள் கால பாரம்பரியமிக்க தங்கத்தில் செங்கோலை ஆதீனங்கள் நம் பாரத பிரதமருக்கு வழங்கியதை பெருமை கொள்வதாகவும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பாரத பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்து வழங்கிய புதிய பாராளுமன்றம் கட்டிடம் திறப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

நிகழ்வின்போது மாவட்டத் தலைவர் எஸ் பாஸ்கர் மாவட்ட துணை தலைவர் மணிமேகலை மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் அமுதா நாகேந்திரன் திருவாரூர் நகர செயலாளர் முறுக்கு பாண்டி நகர பொதுச்செயலாளர் கோவை நடராஜன் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கழுகு சங்கர் ஐடி பிரிவு மாவட்ட தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர் முன்னதாக நகரப் பொருளாளர் வரவேற்றார்

இறுதியாக நகர செயலாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார் இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் மற்றும் ஆதி சிவகுமார் மாவட்டத் துணைத் தலைவர் குடவாசல் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வாசன் எஸ் நாகராஜன் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி பாஸ்கர் கலந்து கொண்டனர் மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளான நன்னிலம் வலங்கைமான் நீடாமங்கலம் கொரடாச்சேரி உள்ளிட்ட 12 இடங்களில் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *