தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் நூலக கோடை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் மணலூர்ப்பேட்டை கிளை நூலகத்தில் மே மாதம் முழுவதும் தொடர்ந்து தினம் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

அடிப்படை கணினி பயிற்சி, கதை சொல்லுதல், வாசிப்பு பழக்கம், வண்ணம் தீட்டுதல், சொற்களை உருவாக்குதல், குழு விளையாட்டுகள் என ஒவ்வொரு நாளும் தினம் ஒரு பயிற்சி வழங்கப்பட்டு வந்ததுஇதன் நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழு தலைவர் கு.ஐயாகண்ணு தலைமை தாங்கினார்.

பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மா.தம்பிதுரை, அரிமா சங்கம் மாவட்ட தலைவர் அம்மு ரவி, வர்த்தகர் சங்க செயலாளர் ச.அன்வர் பாஷா, நூலகக் கொடையாளர் அரிமா தா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட நூலக அலுவலர் சி.பாலசரஸ்வதி, மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் இரா.பன்னீர்செல்வம், அழகாக தமிழ், ஆங்கிலம் எழுதுதல் மற்றும் விரைவாக கணிதம் கணக்கிடுதல் போன்ற பயிற்சிகளை அளித்த தன்னார்வலர் ம.கோவிந்தராஜன் ஆகியோர்களை பாராட்டியும் பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

நூலக ஆர்வலர், வாசகர் வட்ட குழுத் தலைவர் கவிஞர் சிங்கார.உதியன் வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கியும் பேசினார்.

வாசகர் வட்டப் பொருளாளர் வீர.சந்திரமோகன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், நூலக கொடையாளர் கு.ராகவேல், ராணுவ வீரர் கு.கல்யாணகுமார், புரவலர்கள் எம்.எஸ்.சேகர், உடற்கல்வி இயக்குநர் எம்.பாலாஜி, ஆசிரியர் ச.இளங்கோவன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டிப் பேசினர்.

நூலகர் மு சாந்தி நன்றி கூறினார்.

நூலக தன்னார்வலர்கள்ச, தேவி, கி.பாஸ்கரன், செல்வகணபதி, பெ.விக்னேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *