புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்‌ நாராயணசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்‌. அப்போது அவர்‌ கூறியதாவது:

குடியரசு தலைவரை பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பிரதமர் மோடி நான்தான் திறப்பேன் என அராஜகமாக திறந்து வைத்துள்ளார். மோடியின் ஆட்சியில் எல்லாமே மர்மாகவே உள்ளது. அவர் சர்வாதிகாரி ஆட்சி நடத்தி வருகிறார். புதுவை மருத்துவகல்லூாயின் அங்கீகாரத்தை  கொடுக்காமல் டருத்துவ உபகரணங்கள் இல்லை கண்கானிப்பு கேமரா வேலை செய்யவில்லை, தரம்வாய்ந்த மருத்துவர்கள் இல்லை எனக்கூறி ரத்து  செய்துள்ளது.
இந்தாண்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு முட்டுகட்டை போடப்பட்டுள்ளது.இந்த துறையின் அமைச்சர் முதல்வர்ரங்கசாமி தனக்கு வேண்டியவர்களை  தனக்கு வேண்டியவர்களை அந்த மருத்துவகல்லூரியில் சேர்ப்பதை தவிர நிர்வாகத்தை பற்றி கவலை இல்லை.இது புதுவை மாநிலத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. ஒரு அரசு மருத்துவகல்லூரியை நடத்த முடியவில்லை என்ற நிலையை ரங்கசாமி உருவாக்கியுள்ளார். உடனடியாக குறைகளை களைந்து மருத்துவகல்லூரி அங்கீராத்தை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவை பாஜகட்சி ஒரு டூபாக்கூர் கட்சி பொய்யை மூலதனமாக வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள். அவர்களுது செயற்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மத்தியில் உள்ள நரேந்திரமோடி அரசு அதிகப்படியாக ரூ.1250 கோடி கொடுத்திருப்பதாகவும் அதற்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளது. மத்திய அரசு மானியம் கொடுத்துள்ளது என்ற செய்தி 3 மாதத்திற்கு முன்பாகவே வந்தது. அப்போது ரூ.1250 கோடியில் மத்தியரசு கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.700 கோடியாகும். 7-வது சம்பள கமிஷன் ரூ.200கோடி இது நமது மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி. இதனை மானியம் என்ற பெயரில் மத்தியஅரசு கொடுத்துள்ளது. உண்மையில் புதுவை அரசுக்கு கிடைத்தது.ரூ.300 கோடிதான். இதனை திரித்து மாநில் பாஜக கூறுவை ஏற்றுகொள்ளமுடியாது.
127 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.பாடதிட்டத்தை அமுல்படுத்த மத்திய கல்வித்துநை அனுமதி அளித்துள்ளது.அந்த அரசு பள்ளிகளில் எல்லாம் சி,பி,எஸ்.இ பாடதிட்டத்தை கொண்டு வர உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். இதில் பல சிக்கல்கள் உள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.அவர்களுக்க குறைந்தது 6 மாதமாவது பயிற்சி கொடுக்கவேண்டும். அதனை விடுத்து சரியான பயிற்சி இல்லாத ஆசிரியர்களை வைத்து ஆரம்பிப்பது  வெட்ககேடாது. இதில் தமிழ் புறக்கணிப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை படிவத்தில்கூட தமிழ்கட்டாயம் இல்லை விருப்பாடம் என கூறிபிடப்ட்டுள்ளது.தமிழை புறக்கணிப்பது மிகப்பெரிய வேதனை .
      ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது அதற்காக ஒதுக்கிய தொகை 170 கோடி 11 லட்சம். போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பு கேமராவை கண்காணிப்பு, உள்ளிட்ட 10 சேவைகள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசை சேர்ந்த ரெயில்டெல் என்ற  நிறுவனமும்,  கலைஸ் என்ற நிறுவனமும் டெண்டர் கொடுத்தனர். டென்டர் குழுவில் இருந்த 3 அதிகாரிகளில் நிதித்துறை செயலளர் ராஜீவ்,  கலால் துறை துணை ஆணையர் சுதாகரும் இணைந்து கலைஸ் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த குழுவில் இருந்த செயலாளர் அருண் தவறு நடப்பதாக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பினார். தலைமை செயலர் விசாரணை நடத்தி, தவறை கண்டுபிடித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். உள்துறை அமைச்சகம் தலைமைசெயலாளருக்கு கடிதம் அனுப்பி நிதித்துறை செயலாளர் ராஜீவ், கலால் துறை இணை ஆணையர் சுதாகர் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க கூடாது என ஆணை பிறப்பித்தது என எங்களுக்கு ஊர்ஜிதமான தகவல் வந்தது. அதன் பின்னியில் தான் நிதி செயலாளரும், கலால் துறை துணை ஆணையரும் மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் உத்தரவு இல்லாமல் இவர்கள் இருவரும் இந்த தவறை செய்திருக்க மாட்டார்கள். இந்த அரசு ஊழல் நிறைந்த அரசு என்பதற்கு இது உதாரணம்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை மீது பல்வேறு புகார்கள் உள்ளது அதைப்பற்றி விரைவில் வெளியிடுவேன்
 முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது புதுவையின் மாநில அந்தஸ்து  பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசாமல்  இவர் மக்களை ஏமாற்றி வருகிறார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *