திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி ஊராட்சியில் பயணிகளின் பேருந்து நிறுத்தம் நிழலாகம் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் நாராயண மங்கலம் ஊராட்சி பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலையரங்கத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7. 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள பிலாவடி பகுதியில் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்தார்

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எடப்பாடியார் ஆட்சி எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனையை குறித்து சொல்லும் போது உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், வருமான வரி துறையினர் தங்களது கடமையை செய்து வருகிறார்கள் அதிகாரிகளை தாக்குவது என்பது கண்டனத்திற்குரியது சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போனதற்கு இதுவே உதாரணம் எனவும்மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய கணக்கெடுப்பு எடுத்து உடன் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

நிகழ்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் ஒன்றிய குழு உறுப்பினர் டிஎம்சி தியாகராஜன் குடவாசல் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில் துணை பெருந்தலைவர் எம். ஆர். சண்முகா என்ற தென்கோவன் நாரணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சண்முகம் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். ராதா கிருஷ்ணன் நாரணமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னி அருள் மற்றும் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னி அருள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் பலரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *