நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்

புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா பதவி ஏற்றதால் கடந்த வெள்ளிக்கிழமை நடக்க வேண்டிய விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் குமார் தலைமையில் நடைபெற்றது

இந்த விவசாய குறைதீர்க்க கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
ஈ. ஆர். ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசும்பொழுது:-

இதுவரை நடந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்றும் உரிய அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதில்லை என்றும் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் அதிகாரிகள் மாறி மாறி வருகிறார்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்ந்து தலைமை தாங்குவதில்லை நாங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் அடுத்து வருகின்றவர்களுக்கு தெரிவதில்லை இவ்வாறாக விவசாயிகளின் குறை தீர்க்கூட்டம் குறை தீர்க்காமலே நடந்து கொண்டிருந்தது கால சமாதமாக விவசாயிகளின் பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டு வந்ததாகவும் இந்த நிலை தற்போது மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக வந்திருக்கும் தங்களின் தலைமையில் நடக்கக்கூடாது என்றும் இப்போது பதவி ஏற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா இடம் ஈ. ஆர் ஈஸ்வரன் வேண்டுகோள் வைத்தார்

அதற்கு பதில் அளித்த நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் .உமா இனிமேல் அவ்வாறு நடக்காது உரிய பதில்கள் வழங்கப்படும் அதற்கான நிரந்தரமாக கலந்து கொள்ளக்கூடிய அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் அவர்கள் தொடர்ந்து நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை கவனித்து நடவடிக்கை எடுக்க முழு கவனம் செலுத்துவார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உமா பதில் அளித்தார்

தொடர்ந்து பேசிய கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் காவல் துறை கள்ளச்சாராயத்தையும் சந்து கடை மற்றும் இதர நடவடிக்கைகளை ஒழிப்பதில் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்வது இவ்வாறு தொலைபேசியில் சொல்லுகின்ற பொழுது அவ்வாறு சந்து சந்துக்கடையும் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரகளுக்கு தான் அந்த தகவல் போய் சேருகிறது என்றும்

இதனால் என்ன பயன் என்றும் அப்போது
ஈ. ஆர். ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார் அதேபோல மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக அங்குள்ள சம்பந்தப்பட்ட பொது மக்களும் மற்றவர்களும் புகார் கொடுக்கும் பொழுது அதிகாரிகள் வந்து அங்கு அந்த சாயப்பட்டறைகளை சீல் வைத்து மூடி விட்டு போகிறார்கள் அப்புறம் மீண்டும் ஒரு வாரம் பத்து நாள் கழித்து அந்த குற்றம் சாட்டப்பட்ட அல்லது தவறாக நடத்தப்படுகின்ற சாயப்பட்டறையை மீண்டும் திறந்து அதில் தொழில் நடத்துகிறார்கள் இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் கொடுப்பதில் என்ன பயன் என்றும்

சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்று நீரில் கலந்து இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இதனால் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போய் உள்ளார்கள் என்றும்

இதெல்லாம் நடக்காமல் நிர்வாகம் சிறப்பாக நடப்பதற்கு புதிதாக வந்திருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா சீர்படுத்தி முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ. ஆர். ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *