கேலோ இந்தியா சார்பில் தேசிய அளவில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்தது.

இதில் தமிழகத்தில் 10-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சென்னை கல்லூரியில் படிக்கும் மதுரை நீச்சல் வீரர் விக்காஸ் பங்கேற்றார்.

அவர் 50 மீட்டர் பீரிஸ் டைலில் 23.47 வினாடிகளில் நீந்தி தங்கப்பதக்கமும், 100 மீட்டர் பீரிஸ்டைலில் 52.78 வினாடிகளில் நீந்தி வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற வீரரை தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *