சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *