வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயம் கருப்பையா ஆகியோர் ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை பாதுகாத்து வைத்திருந்தனர். அதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், இது செங்குந்த முதலியார்கள் சூரசம்ஹார மண்டகப்படியின்போது வழங்கியதாகும். இந்தப் பட்டயம் 1.7 கிலோ எடை, உயரம் 18 செ.மீட்டர், நீளம் 45 செ.மீட்டராக உள்ளது. பட்டயத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துகளை வைத்து பார்க்கும்போது, அவை கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *