புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ விழாவில் திருக்காமீஸ்வரர் ரிஷப வாகனம், மயில்வாகனம், இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவை களில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வில்லியனூர் 4 மாடவீதி வழியாக தேர் பவனி சென்றது. பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் வழடிி நெடுகிலும் நின்று வழிப்பட்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள், கோயில் தனிஅதிகாரி திருவலசன் ,வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *