டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க் அக்கவுண்டில் இருந்து டுவிட் எதுவும் காணப்படவில்லை. எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் எதுவும் பதிவிடவில்லையே என்ற கேள்விகள் எழத்துவங்கியது. திடீரென டுவிட்டர் உரிமையாளர் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான். எலான் மஸ்க் சென்றிருக்கும் நாட்டில் டுவிட்டர் சேவையை பயன்படுத்த முடியாது. எலான் மஸ்க் தற்போது சீனா சென்றிருக்கிறார். அங்கு டுவிட்டர் தளத்தை பயன்படுத்த முடியாது என்பதால், அவர் டுவிட் எதுவும் செய்யவில்லை. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து எலான் மஸ்க் ஒவ்வொரு நாளும் பலமுறை டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமயங்களில் ஒன்றிரண்டு டுவிட்களையேனும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2022 முதல் எலான் மஸ்க் நீண்ட நேரம் டுவிட் செய்யாமல் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். அப்போது டுவிட்டரை வாங்குவதில் எலான் மஸ்க் குறியாக இருந்தார். இதன் காரணமாக அவர் அதிக டுவிட்களை மேற்கொள்ளவில்லை. தற்போது சீனாவில் இருப்பதால் எலான் மஸ்க் டுவிட் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார். சீனாவில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் என பல்வேறு வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *