விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் வசித்து வருபவர் தமிழ் திரைப்பட நடிகர் ராஜ்மோகன். இவர் அண்ணாதுரை,AGP வெள்ளை யானை, கோலிசோடா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் குச்சி ஐஸ், தி டிரைனர், பட வா, சங்கர லிங்கத்தின் சைக்கிள் வண்டி, மரகதகாடு ஆகிய படங்களில் நடித்து உள்ள நிலையில் விரைவில் திரையுலகத்திற்கு இப்ப படங்கள் வர உள்ளது.

திரைப்பட நடிகரான ராஜ்மோகன் மரக்கன்றுகள் நடு முகாம்,ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் செய்த சேவைகள்,ரத்த தான முகாம் போன்றவைகளை நடத்தி உள்ள நிலையில் இந்துஸ்தான் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் இவரது சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவ்விருதிணை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திரைப்பட நடிகர் ராஜ்மோகனுக்கு வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *