அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு கிராமம் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு தனித்து புரதான பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள மேளத்துடன் செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வலம்புரி ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது அன்று மாலை வானவெடியுடன் மேல காலங்கள் முழங்க ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட பொங்கல் பானை அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் அன்று இரவு தோப்புபட்டியில் இருந்து தீ வெட்டியுடன் அம்மனை அழைத்து வந்து பாலமேடு மண்டு புளியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லாயி அம்மன் திருக்கண் வந்து சேர்தல் நிகழ்ச்சியும் கோவில் வீட்டில் இருந்து தீவெட்டியுடன் நகை பெட்டி எடுத்து வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ செல்லாயி அம்மனுக்கு கண் திறந்து அலங்கார அபிஷேகம் செய்தல் மற்றும் பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும் அம்மன் ஆலயத்தில் சக்தி பூஜை செய்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல் அபிஷேகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சக்தி கிடாய் வெட்டுதல் அருள்மிகு மஞ்ச கருப்புசாமிக்கு அபிஷேகம் செய்தால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலாகுத்துதல் ஸ்ரீ செல்லாயி அம்மனுக்கு செலாகுத்துதல் மற்றும் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

நான்காம் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை வான வேடிக்கை சிறப்பு அலங்காரத்துடன் பொதுமக்கள் அனைவரும் பழக்கூடை கொண்டு அருள்மிகு செல்லாயி அம்மன் ஆலயம் சென்றடைந்தனர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது

அதனை தொடர்ந்து அம்மன் ஆலயத்தில் குழந்தை வரம் வேண்டுவோர்க்கு அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும் கோவிலில் இருந்து நகை பெட்டியுடன் கோவில் வீடு வந்து சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்த கோடிகளுக்கு விழா கமிட்டினர் சார்பாக நான்கு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து கலை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது இவ்விழா ஏற்பாடுகளை பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *