மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் வைகாசி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 109-வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது.

காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளையும் ஆசியும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ராஜேஸ்வரி
வேதாசலம் அரசு கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ்.மாரியப்பன்,திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரைகே.மனோகரன்,சென்னை வடபழனி சேர்ந்த டாக்டர் மகாலட்சுமி மற்றும் தொழிலதிபர்கள் காரணை மண்டபத்தைச் சேர்ந்த சங்கர், ஆரப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன்,
சென்னையை சேர்ந்த சுவாதி,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில்கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை,புதுசேரி, பெங்களுரு, கடலூர்,மற்றும் விழுப்புரம் உள்ளிட்டபல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் ஆசிபெற்றனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா ஸ்வாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில்ஏற்பாடு செய்திருந்தனர். இதில்அறகட்டளை நிர்வாகிகள் டி.கண்ணண், கே.ஆர்.சுரேஷ், வி.கமலக்கண்ணண்,
வழக்கறிஞர் சுரேஷ், ஆர்.துளசிங்கம்,பி.பரந்தாமன் முன்னிலையில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *