ஒடிசா மாநிலத்தில், (02.06.23-இரவு) ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததும் படுகாயம் அடைந்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் தலைவரருமான மறைந்த மு. கருணாநிதியின் 100 வது பிறந்தநாள் விழா இன்று (03.06.2023 ) நாமக்கல் அண்ணா சிலையின் அருகே அக்கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க அவருடைய பிறந்தநாளில் 1 நிமிடம் மௌனமாக இருந்து ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதனால் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சி அஞ்சலி நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே. ஆர். என். இராஜேஷ்குமார் தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தினை செய்தனர்

திமுக கட்சி தலைவர் தமிழக முதல்வர் மு. ஸ்டாலின் அறிவித்துள்ளபடி முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில்,, ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், நகராட்சி தலைவர் து. கலாநிதி, ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *