திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் சுமார் 40 வருடங்களாக ஸ்ரீ எம்பெருமனார் சபா சார்பாக பரம்பரை அறங்காவலர் குழு ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி திருக்கோவிலில் பிரமோற்சவ பெருவிழா மற்றும் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி சேனாதிபதி உற்சவம் மற்றும் நகர சோதனை கொடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நேற்றைய தினம் வரை தொடர்ந்து ஆறு நாட்களாக ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவிலில் பிரமோசர்வ பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதனை தொடர்ந்து இன்று ஏழாம் நாள் திருத்தேர் கலசத்திற்கு பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என ஏராளமானோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இந்த திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியிலிருந்து வருகை தந்த ஒன்றிய குழு துணை தலைவர் ஞானசேகரன் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திருப்பதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *