நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியிலிருந்து நான்கு மாணவ,மாணவிகளும் ஈரோடு ஸ்ரீசைதன்யா பள்ளியிலிருந்து ஐந்து மாணவ,மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் இக்குழுவினர் அமெரிக்கா சென்றனர்..

.அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் விண்வெளி பயணம், விண்வெளி மேம்பாடு மற்றும் விண்வெளி குடியேற்றங்களுக்கான தற்போதைய யோசனைகள்,இளம் தலைமுறை மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன.

…பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்வெளி ஆராய்ச்சி தலைவர்கள்,விஞ்ஞானிகள் என பலர் கொண்ட இதில்,கலந்து கொண்ட ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவியர்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி,சிறுகோள் சுரங்கம் என்ற தலைப்பில் காட்சிப்படுத்துதல் மற்றும் விளக்கவுரை மேற்கொண்டனர்..இந்நலையில் மாநாடு முடிந்து கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் காந்திபுரம் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியின் டீன் அன்பழகன்,முதல்வர் அனீஷ் அகஸ்டின் மற்றும் நிர்வாகிகள் ஹரி பாபு,நாகேஸ்வரராவ்,பாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்..

மாநாட்டில் காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் பயிலும், கிரிநாத், ராகுல், யோகித், கார்திகேயா ஆகியோரும்,ஈரோடு ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் பயிலும் சஷ்திகா ஸ்ரீ உமையாள்,ஹேப்பி ஜிந்த், சஞ்சித் முரளிதரன்,கிரிஷ்வந்திகா என ஒன்பது மாணவ,மாணவிகள் சென்று வந்தது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *