புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு அறக் கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கிப் பேசினார். அரசியல் கலை இலக்கியப் பணிகளால் உயர்ந்திருக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் செயலாளர் வள்ளி, செல்வதுரை நீஸ் ,குரு முனிசாமி , தமிழ்ச் சங்கச்செயலர் அருள்செல்வம், படைப்பாளி ரமேஷ் பைரவி, ராஜேஷ், கிருஷ்ணகுமார் , கவிஞர் சரசுவதி வைத்தியநாதன், தேவமூர்த்தி, மலையன் ஸ்ரீகாந்த், வீணை கலாவதி, அன்பு நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *