மக்கள் உரிமை கூட்டமைப்பு மற்றும் புதுவை சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வி உரிமை நாடு நடந்தது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சோழிய செட்டியார் சமுதாய கூடத்தில் நடந்த மாநாட்டில் சட்டக்கல்லூரி மாணவி சுகன்யா வரவேற்றார். மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். மக்கள் கல்வி இயக்கம் தலைவர் பேராசிரியர் பிரபா கல்விமணி கருத்துரையாற்றினார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட சிக்கல்கள் குறித்து தாய்மொழி வழிக்கல்வி கூட்டமைப்பு தலைவர் இளங்கோ பேசினார். மாநாட்டில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழர் களம் செயலாளர் அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் வக்கீல் பரகத்துல்லா, புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை தமிழ் வழி கல்வியை செயல்படுத்த வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத அவசரகதியில் இந்த ஆண்டு புதுவை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியறுத்தி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *