பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நெஞ்சை பதப்பதைக்க வைத்த ரயில் விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் மூன்று ரயில்கள் மோதி சுமார் 300 பேர் பலியாயினர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 56 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகின்றனர். இதுவரை 793 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் ஒடிசாவில் விபத்துக்கு உள்ளான ரயிலில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நாயக்கர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரியும் வெங்கடேசன் என்பவர் இன்று பாபநாசம் ரயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து அவரது சொந்த ஊரான நாயக்கர் பேட்டைக்கு வருகை புரிந்த ராணுவ வீரர் வெங்கடேசனை, அவரது குடும்பத்தினர்

மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும் இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்றது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும், குடும்பத்தார்களையும் உறவினர்களையும் ஊர் மக்களையும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *