மதுரை,
மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவனின் லிங்கம் மீது நின்ற நிலையில் முழு திருமேனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகிறார்,

இக்கோவிலை 1935ஆம் ஆண்டு பாட்டியானம்பலம் குமாரார் பா.இருளப்பன் அம்பலகாரர் குடும்பத்தினர் மடலாயமாக எழுப்பபட்டு வழிபாடும், பூஜை செய்து வருகின்றனர் இதில் வைகாசி மாதம் கடைசி திங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் அவதார திருநாளில் குட்லாடம்பட்டி சிவன் மலையில் சிவஞானசபை நடத்தி வரும் ஸ்ரீசாஸ்தானந்த சுவாமிகள் மடலாயத்தில் பதினாறு திரவியம் அபிஷேகம்,மலர் அலங்காரத்தில் குருபூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர் தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் விழா ஏற்பாடுகளை இருளப்ப அம்பலகார குடும்பத்தினர் மற்றும் சிவனடியார்கள் செய்து இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *