உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வருவதாலும், ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்ததாலும், ஏற்கனவே சவுதி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது. கடந்த மாதம் ஒருநாளைக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவில் உற்பத்தியை குறைத்துள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் மேலும் ஒரு மில்லியன் குறைத்து ஒரு நாளைக்கு 9 மில்லியன் பேரல்கள் ஆயில் உற்பத்தி செய்யப்படும் என சவுதி அறிவித்துள்ளது. இதனால் ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பேரல் உற்பத்தி நிறுத்தப்படும். இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கச்சா எண்ணெய் விலை சுமார் 1 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மெடியட் கச்சா எண்ணெய் 1.41 டாலர் அல்லது இரண்டு டாலர் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 73.15 டாலருக்கு இருந்த விலை, தற்போது 75.06 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரிட்டனின் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 1.51 டாலர் அல்லது 2 அதிரிகத்து 77.64 டாலரில் இருந்து 78.73 டாலராக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் ஜூலை மாதத்தில் சந்தை பற்றாக்குறை ஒரு நாளைக்கு 3 மில்லியன் பேரல்களை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் வரவிருக்கும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த குறைப்பு சுமார் 6 மாதத்திற்கு நீடித்தால் 6 டாலர் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷியா, நைஜீரியா, அங்கோலா நாடுகள் தங்களுடைய வழக்காமான உற்பத்தி அளவை எட்டினால் மிகப்பெரிய தாக்கம் இருக்காது எனவும் கூறப்படுகிறது. அதேவேளையில், தினசரி உற்பத்தியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3.22 மில்லியன் வரை உயர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் ஆகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *