சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படவுள்ளது. மறைந்த முன்னாள் தலை வர் இளைய பெருமாள் சமூக பணியை அறிந்து தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவருக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். . இந்த நூற்றாண்டு மிகப்பெரிய விபத்து ஓடிசா ரெயில் விபத்தாகும். 275 பேர் இறந்துள்ளனர். ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில் இந்த விபத்திற்கு காரணம் மனித தவறுதான். அதனை கையாண்ட அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள். மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இது இயல்பான விபத்தல்ல. நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து. இதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்தில் பற்றி எரியும் கருத்தாக உள்ளது. தமிழ கத்தை பொறுத்தவரை காவிரி என்பது நம் உயிர் மூச்சு. காவிரி நதி தோன்றி யதிலிருந்து தமிழகத்திற்கு பலனும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பருவ மழை காலங்களில் 20 லட்சம் கன அடி வரை தமிழக காவிரி டெல்டா கடை மடை பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் 177.25 கன அடி நீர் தமிழ கத்திற்கு வழங்க வேண்டும் என அறி வித்தது. அதில் குறைவு ஏற்படக்கூடாது. குறைவு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும். நீரை பெற நமக்கு உரிமை உள்ளது. பாஜகவினர் தமிழக காங்கிரசை விமர்சிக் கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருந்த போது அன்றைய முதல்வர் பொம்மை மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். அப்போது ஏன் தமிழக பா.ஜனதா எதிர்க்க வில்லை. அப்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் எதிர்த்தது. மேலும் 2017-ம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை அமைச் சகம் அனுமதி அளித்தது. 2018 நவம்பர் 22-ல் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது பா.ஜனதா அரசு. அதற்கு தமிழக பா.ஜனதா பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகஅரசு அனுமதி மற்றும் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டக்கூடாது. சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்து நரேந்திரமோடி நாடாளுமன்றத்தை திறந்துள்ளார் . இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். முன்னதாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் தில்லை மக்கீன் வரவேற்றார். மாநில செயலாளர் சித்தார்த்தன், சேரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமின் ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், ஜோதி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் செந்தில்வேலன், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், செழியன் மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *