நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் மற்றொரு அங்கமான விவேகானந்தா திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பாக, அழகுக்கலை பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. இப் பயிற்சி பட்டறையினை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் மு.கருணாநிதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இதில் தலைமை செயல் அலுவலர் சொக்கலிங்கம், திறன் மேம்பாட்டு இயக்குனர் முனைவர் குமாரவேல், கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சசிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அழகுக்கலை நிபுணர் கோகிலவாணி மற்றும் தீபிகா, ஆகியோர் பேசும்போது :-

நாளுக்கு நாள் புதிதாக வளர்ந்து வரும் அழகுக்கலை பற்றியும் அதில் பயன்படுத்தபடும் உயர் தொழில்நுட்பங்களை பற்றியும் அதை அறிந்து கொள்வதன் மூலம் வருமானத்தை பன்மடங்காக எப்படி அதிகரிக்கலாம் என்றும். மேலும் அழகு கலை பற்றி நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டதாலும். இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்துவிட்டது என்று கூறினார்கள்

இந்த பயிற்சி முகாமில் எளிய ஒப்பனையில் தொடங்கி மெஹந்தி டிசைனிங், கூந்தல் அலங்காரம், பேசியல், ப்ளீச்சிங,; பெடிக்யூர், மெடிக்யூர் (கால் விரல்கள் மற்றும் கைவிரல்களை பராமரித்தல்) த்ரெட்டிங் மற்றும் மணப்பெண் அலங்கார பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக கிருஷ்ணா, மற்றும் கிருஷ்ணாஸ்ரீ மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 180 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *