கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட பிரதிநிதியுமான மாரியப்பன் தலைமையில் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகளை மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள், திமுக பொருளாளர் மாரிராஜ், இளைஞர் அணி சார்பில் அருண்குமார், இசக்கிமுத்து, ராமலிங்கபுரம் கிளை செயலாளர் மகேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், லட்சுமணதேவர், பேயாண்டி, முத்துமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *