இந்த வருடம் 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஆனந்த் அவரது தோட்டத்தில்
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்
உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு மேல ஆம்பூர் பஞ்சாயத்து தலைவர் குயிலி, கீழ ஆம்பூர் பஞ்சாயத்து தலைவர் மாரிசுப்பு , ஆகியோர் தலைமையில் மரம் நடுவிழா நடைப் பெற்றது.

வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சித்திரை மற்றும் சமூக ஆர்வலர் சிவராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இவ்விழாவில் மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை சிறப்பித்தனர்.காவேரி கூக்குரல் சார்பாக இலக்கு – 1.1 கோடி மரங்கள் இந்த ஆண்டு நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு தொடங்கப்பட்டது.

ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவருகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடும் மாபெரும் செயலை செய்து வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கெடுக் கின்றனர். மரம் நடவு தவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசக ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *