ச.முருகவேல் செய்தியாளர் நெட்டப்பாக்கம்(புதுச்சேரி)
புதுச்சேரியின் விடுதலைக்கு பாடுபட்ட முதுபெரும் தியாகியும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் மடுகரையில் கடைபிடிக்கப்பட்டது.
மடுகரை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு புதுவை முன்னாள் முதல்வரும் தற்போதைய எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் தொகுதி எம்எல்ஏ ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னதாக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுவை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மடுகரை அரசு பள்ளி எதிரே மரக்கன்றுகள் நட்டார். அதனைத் தொடர்ந்து மடுகரை மந்தைவெளி பகுதியில் தியாகி வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்