உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது. அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார். ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. இது உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் ஆகும். குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, என்று அவர் மேலும் தெரிவித்தார். ரஷியாவின் வெடுகுண்டு தாக்குதலில் அணை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *