புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக கலைமாமணி வி.முத்து 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவர்களாக ஆதி கேசவன், திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக அருள்செல்வம், துணைச் செயலாளராக தினகரன், ஆட்சிக்குழு உறுப்பி னர்களாக உசேன், ராஜா, பொறிஞர் சுரேசு குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளனர்..இந்த புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்   முன்னாள் நீதிபதி சேது.முருக பூபதி தலைமையில் நடைபெற்றது. முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஜான்குமார், வக்கீல் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைத்து புதிய பொறுப்பாளர்களின் பெயர்பலகையை திறந்து வைத்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக 5வது மறையாக தலைவராக  பொறுப்யேற்ற தும்துவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் தமிழ்ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *