ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ், உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டரை தன்வசப்படுத்தினார். அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். டுவிட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், டுவிட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது. டுவிட்டரில் ஒரு மணிநேரம் ஓட கூடிய வீடியோவை என்னால் காண முடியவில்லை என பதிவிட்டு உள்ளார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார். இதற்கு அந்த நபர், பாராட்டுகிறேன். யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு, பின்னர் ஒரு போதும் அதனை திரும்பி பார்க்காத ஒரு நாள் வரும். அதனை நான் பார்க்க முடியும் என பதிவிட்டு உள்ளார். டுவிட்டரில் மஸ்க், பல மாற்றங்களை செய்து வருகிறார். அவர் நேற்று, சில வாரங்களில், புதிய விசயங்களை உருவாக்கி டுவிட்டரில் பதிவிடுபவர்களான கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் வரும்போது, அவர்களுக்கு பணம் அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அந்த புதிய உருவாக்கும் திறன் வாய்ந்த கிரியேட்டர், டுவிட்டரால் ஆய்வு செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களாகவும் அவை இருக்க வேண்டும். அந்த, எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படும் என மஸ்க் பதிவிட்டார். இதேபோன்று, டுவிட்டரில் ஆய்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், 2 மணிநேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *