விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசணையின் படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, ரம்ஜான்,பொங்கல்,கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை கால நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் , அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு பட வெற்றியை கொண்டாடும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காந்திபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில்,நடைபெற்ற.இதில் சுமார் ஐம்பது பேர்களுக்கு வேஷ்டி,சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், துணை செயலாளர் முகமது ஆசிக் இணை செயலாளர் அருண்குமார் அமைப்பாளர் செந்தில்குமார் சிங்கை நகர மாணவரணி தலைவர் தளபதி சுரேஷ் செல்வபுரம் பகுதி மாணவரணி செயலாளர் வசந்த் மற்றும் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *