செங்கல்பட்டு
இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளில் கொண்டாடப்பட்டது .

இன்று நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய தேசிய கொடியேற்றி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் எழுதுகோல்கள் இனிப்புகள் வழங்கி சர்வதேச பொது செயலாளர் டாக்டர் A. சுரேஷ்குமார் அவர்கள் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ.டாக்டர் T. G.மனோகர் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அட்வகேட் குணா அட்வகேட் வினோத் மாவட்ட துணைச் செயலாளர் மதனகோபால் ஒன்றிய அமைப்பாளர் நந்தகோபால் இளைஞர் அணி ஆதித்யா மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் ராஜா மற்றும் மறைமலைநகர் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.