புவனகிரி செய்தியாளர் சக்திவேல்
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் அரச மரத்தடி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது-
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள. மருதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அரச மரத்தடி கற்பக விநாயகர் உடனாகிய ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது.

விழாவில் முன்னதாக காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கிராம தேவதைகளாகிய ஸ்ரீ .வீரனார் ஸ்ரீ.ரேணுகா மாரியம்மன் .ஸ்ரீ. ஆதிபராசக்தி ஸ்ரீ. முருகன் சமேத ஆகிய இஷ்ட்ட தெய்வங்களுக்கு மந்திரங்கள் முழங்க. மங்கள வாத்தியத்துடன் மகா கணபதி பூஜை. கோ பூஜை.நவகிரக பூஜை . வேள்வி பூஜை. லட்சுமி கணபதி ஹோமம் . நவகிரக ஹோமம் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது யாகச் சாலையில் இருந்து கிராம பெரியவர்கள் முன்னிலையில் புறப்பட்டு மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
திரு குடமுழுக்கு விழா விமரிசையாக தொடங்கியது
அதனையடுத்து காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
அருள் மிகு அரச மரத்தடி கற்பக விநாயகர், ஸ்ரீ ரேணுகா மாரியம்மன் அம்பிகை உடனாகிய ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா காட்டுமன்னார்கோயில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருதூர் ஏ. இராமலிங்கம் அவர்களின் துணைவியார்மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிமுன்னிலையில்வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பரிவார தெய்வங்களான சிவ துர்க்கை . ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி .ஸ்ரீ. மகாவிஷ்ணு .ஸ்ரீ. பாலமுருகன் .ஸ்ரீ. மகாலட்சுமி ஆகியசுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது திளைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அரச மரத்து விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரத்தனை காண்பிக்கப்பட்டது
இதில் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விநாயக பெருமானை வழிபட்டு சென்றனர் பின்னர் புவனகிரி ஆர். வி .பி. மருத்துவமனை சார்பில் மருத்துவர் பி.கதிரவன் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
விழாவில் கிராம இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மகளிரணி பொறுப்பாளர்கள்மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மருதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.