வலங்கைமானில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில்ஸ்ம்வஸ்தா அபிஷேகம்,
கும்பாபிஷேகம் நடந்த முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தில்
ஸ்ம்வஸ்தா அபிஷேகம்,கும்பாபிஷேகம் நடந்த முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
காலை 10-மணிக்குஅனுக்ஞை கட ஸ்தாபனம், 10.30மணிக்கு மஹாசுதர்ஸன் ஹோமம்,காலை 11-மணிக்கு மஹா பூர்ணாஹூதி,நண்பகல் 12-மணிக்குதிருமஞ்சனம், மதியம்
1-மணிக்கு மஹா தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்கல்,
மாலை 6-மணிக்குஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவிசகிதமாய் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருவீதியுலாக் காட்சியும்
நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஹோமங்களை பஞ்சராத்ர அலங்கார சக்ரவர்த்தி குடந்தை
ஸ்ரீ பக்திசார பட்டாச்சார் ஆலய அர்ச்சகர்எஸ். வேம்பு பட்டாச்சார்சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஆலயதக்கார் ஆ ரமேஷ்,ஆய்வாளர் எஸ்.தமிழ்மணி, நகரவாசிகள் மற்றும்ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *