எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெடுந்தூரம் நடைபயணமாக சீர்காழியை கடந்து சென்று வருகிறார்கள்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்துகொள்வாதற்க்கு சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நடைபயணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக வேளாங்கண்ணி நோக்கி சென்று வருகின்றனர்.

வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருஉருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக்கொண்டும் செல்கின்றனர். சில பக்தர்கள் குழந்தைகள், வயோதிகர்களை அழைத்துக் கொண்டு நேர்த்தி கடன் செலுத்த பாதயாத்திரையாக செல்கின்றனர். நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே தங்களது நடைபயணத்தை தொடர்கின்றனர்.

பகல் மற்றும் இரவு பொழுதுகளில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு நடை பயணம் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *