வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 2-ம் ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள்திரளாக கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் ஆலயம் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும் இவ்வாலயத்தில் வருடம் தோறும் ஆவணி மாதம்
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்தது ஆகும்,அதேபோல் இந்தாண்டு ஆவணி மாதம் கடந்த 20-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரமும்,
அதேபோல் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சிறப்புஅலங்காரமும் நடைப்பெற்றது,
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர், வருகின்ற 03-ந்தேதி
மூன்றாம் ஞாயிறைமுன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரமும்,10-ந்தேதி நான்காம்ஞாயிறை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும்மாலை சிறப்பு அலங்காரமும், வருகிற
17-ந்தேதி கடைசிஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை
11.30 மணிக்கு அம்மன்வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா
காட்சியும், இரவு 8-மணிக்கு அருகிலுள்ளதெப்பக்குளத்தில் தெப்பத்தில் அம்மன்பவனிவரும் காட்சியும், அதுசமயம் வலங்கைஎஸ்.ஏ.எஸ்.சந்திரசேகரன்ஆலங்குடி ஏ. வி. என்.
பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும்,
வான வேடிக்கைகளும்நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்ஆ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் எஸ் தமிழ்மணி,அலுவலக மேலாளர்தீ. சீனிவாசன் மற்றும்
திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.