மணலி பகுதியில், ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
திருவொற்றியூர்.
சென்னை, மணலி. சின்ன மாத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி(35) இவர் டிரைவர். இவரது மனைவி நந்தினி, இவர்களின் பெண் குழந்தைகள் சக்தி(4), லட்சுமி(2) . இவர்களுடன், பாலாஜி தந்தை ராமதாஸ் வசித்து வருகிறார்.நேற்று முன் தினம் காலை பாலாஜி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் நந்தினி, ராமதாஸ் ஆகியோர் இருந்தனர்.
சக்தி, லட்சுமி விளையாடி கொண்டிருந்தனர். கடைக்கு ராமதாஸ் சென்றிருந்தார். கழிவறைக்கு நந்தினி சென்றார். அந்த நேரத்தில், சக்தி, அங்கிருந்த ஆல் அவுட் கொசு மருந்தை எடுத்து விளையாடியுள்ளது. பின், லட்சுமி கைக்கு மருந்து சென்றது. அந்த மருந்தை லட்சுமி வாயில் வைப்பதபடி இருந்துள்ளது. நந்தினி பார்த்து, கொசுமருந்தை குழந்தை கையில் இருந்து பிடுங்கினார்.
அதற்குள் லட்சுமி வாயில் இருந்து நுரை தள்ளியது. கொசுமருந்தை லட்சுமி குடித்துவிட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த லட்சுமி மாலை உயிரிழந்தது. புகாரின்படி மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து, லட்சுமி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.