வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்
நிலையம் திறக்கப்பட வேண்டும் என ஆலங்குடியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலங்கைமான் ஒன்றிய13-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற இந்திய மாதர் சம்மேளனம் வலங்கைமான் ஒன்றிய13-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில்எஸ். சரோஜா ஆர். பானுமதி தலைமை தாங்கினார்கள், சுகந்திவரவேற்புரையாற்றினார்

மாநாட்டை மாவட்ட மாதர் சம்மேளனம் சங்க செயலாளர் தமயந்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டதுணைச் செயலாளர்சு தமிழ்ச்செல்வி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழ கு. ராஜா ஆகியோர்
சிறப்புரை ஆற்றினார்கள்.

ஒன்றியக் குழ 15பேர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள் 5பேர்,ஒன்றிய தலைவர் சுதா,செயலாளர் தேவிகா,துணைத் தலைவர் எம் .கவிதா, துணைச் செயலாளர் பி. மாலா,பொருளாளர் அம்சேஸ்வரி ஆகியோரை பொருபாபாளர்களாகஅறிவித்து, வாழ்த்துக்கள் கூறினர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர்
எஸ். எம். செந்தில் குமார்உரையாற்றினார், இறுதியாக மாதர் சங்கமாவட்ட தலைவர் சுலோச்சனா உரையாற்றினார். தீர்மானங்கள்:-
01.சட்டமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும்பெண்களுக்கு33சதவீதம்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.02.வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட வேண்டும். 03.வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துகுடும்பங்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்.

திருமணஉதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் திட்டத்தை தொடர்ந்துநடத்த வேண்டும். 05.வலங்கைமான் அரசு மருத்துவமனையில் மூடிகிடக்கும் உடற்கூறு ஆய்வு மையத்தை திறந்து இயக்க வேண்டும்,பணியாளர்கள் அமர்த்த
படவேண்டும். 06.வலங்கைமான், ஆலங்குடி மருத்துவ மனைகளில் காலியிடத்தை நிரப்பபணியாளர்கள் அமர்த்த
படவேண்டும். 07.வலங்கைமான், ஆலங்குடி மருத்துவ மனைகளில் 24-மணிநேரமும் டாக்டர்கள் இருந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.என்பது உள்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் புதிய செயலாளர் எஸ். தேவிகா
அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *