எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் பள்ளி மாணவர்களுடன் சந்திராயன் 3 உந்துவிசை இயக்குனர் மோகன் குமார் கலந்துரையாடல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சந்திராயன் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற சந்திராயன் 3 லேண்டர் உந்துவிசை இயக்குனர் மோகன்குமார் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

சந்திராயன் -3 லேண்டர் தரையிறங்கும் திட்ட. உந்துவிசை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.
சந்திராயன் 3 நாங்கள் நினைத்தபடியே நிலவின் தென் துருவத்தில் சரியான பாதையில் பயணித்து சரியான இடத்தில் தரை இறங்கியது.
எங்களது முந்தைய கணிப்புகளின் படி நிலவின் தென் துருவத்தில் நீர், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருக்கும் என்பது தற்போதைய ஆய்வுகள் மூலம் உறுதி ஆகி உள்ளது.
இத்தகைய தகவல்கள் 14 நாட்கள் நமக்கு ரோவரால் அளிக்கப்படும். நிலவில் 1 நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமம். ரோவர் சூரிய ஒளி சக்தியை கொண்டு இயங்குவதால், 14 நாட்களுக்கு பிறகு நிலவில் இருள் சூழும்போது ரோவர் செயல்படாது.
சந்திராயன் 3 ல் மூன்று பிரிவுகள் உள்ளன, 1.லேண்டர் 2. ஆர்பிட்டர் 3. ரோவர் இவை மூன்றும் அடங்கிய விண்கலம் நிலவை அடைந்தததும் நிலவின் சுற்று வட்ட பாதையை அடைந்ததும் ஆர்பிட்டர் பிரிந்து, லேண்டர் தென் துருவத்தில் தரை இறங்கியது. லேண்டரின் வயிற்று பகுதியில் இருந்து சிறிய கார் போன்ற ரோவர் வெளியேறி பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, நிலவின் வெப்பநிலை, தனிமங்கள், இவற்றை ஆய்வு செய்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அளித்து வருகிறது. என தெரிவித்தார்
மேலும் சந்திராயன் 3 ஆய்வு குறித்து ISRO வளைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.