புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்
ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா கூட்டப்பொருள் பற்றி விளக்க உரையாற்றினார் இன்றைய பொருளாளர் வெங்கடேசன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார் நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணன், கோவிந்தராசு, விஜயலட்சுமி, மீனாம்பாள், தங்கதுரை, கோவிந்தசாமி, செல்வகுமார், அசோக் தமிழரசன் ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.மேலும் இத்திட்டத்தை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
3.புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞரணி மகளிர் அணி மாவட்ட மாநாட்டை வெற்றிமாநாடாக நடத்திய மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.