குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் முதல் முறையாக நடைபெறும் “ஆசிய ஜவுளி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றி மத்திய ஜவுளி, ரயில்வே துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஷ், ஜவுளி தொழிலில் உள்ள சவால்கள், பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க நாட்டில் ஜவுளி துறையின் சங்கிலியை சார்ந்தோர் பங்கேற்றிருபோது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,
பல ஆண்டுகளாகவே ஆசியா ஜவுளி சந்தையில் முன்னணி வகிப்பதாக கூறியவர், இந்தியா, சீனா, வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உலக அளவில் ஜவுளி தொழிலில் ஆசியா முண்ணனியாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார். உலக அளவில் இந்தியா ஜவுளி உதிரிபாகங்கள் உற்பத்தியில் 2வது இடத்தையும், 2வது அதிக ஸ்பிண்ட்லர்ஸ் உள்ள நாடாகவும் உள்ளதாகவும், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ஜவுளி தொழிலில் உலக மையமாக இந்தியாவை மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார் என்று குறிப்பிட்டவர்,ஆடை நமது கலாச்சாரத்துடன் இணைந்தது மட்டுமின்றி பலஆண்டுகள் ஆய்வின் மூலம் நமது நாட்டின் ஜவுளி உற்பத்தி தரம், நிரந்தரம், நிலையான சந்தையை அடைவதற்கு ஏற்றதாக மாறியுள்ளதாகவும்,
ஜவுளி தொழில் நாட்டில் 8% வணிக ரீதியான ஏற்றுமதி பங்கு மட்டுமின்றி 10 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.