இரா.மோகன்.தரங்கம்பாடி,செய்தியாளர்.
தரங்கம்பாடி அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா.
பிரம்மோற்சவம் 11 ஆம் நாள் திருவிழாவான பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருள்மிகு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில வருடாந்திர பிரம்மோத்சவ திருவிழா கடந்த இருபதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் 11 ம் நாளான விழாவான பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.முன்தாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் உள்ள இரட்டை பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பால் கூட ஊர்வலம் மாசில்லாமணிநாதர் ஆலயம், கோட்டைவாசல், தரங்கம்பாடி பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை வழியாக சென்று அருள்மிகு ரேணுகா தேவி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
அவரைத் தொடர்ந்து ரேணுகா தேவி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.