மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழி ஜிஎஸ்டி சாலையில்மகான் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

இந்த பிருந்தாவனம் கருங்குழி பிருந்தாவன் சித்தர் என
பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் யோகிரகோத்தமா ஸ்வாமிகள் 18.04.1994 ல் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் பரிபூரண அருளை பெற்று நிறுவினார்.

இங்கு தொடர்ந்து கடந்த 28 ஆண்டுகளாக வருடா வருடம் ஆகஸ்டு மாதம் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் ஆராதனை விழா மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ஆவணி மாதம் 15 ந் தேதி வெள்ளிக்கிழமை மகான் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் 352 -ஆம் ஆண்டு ஆராதனை_விழாகருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தின் 29 – ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும்
கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா யோக பிரவேசம்10 – ஆம் ஆண்டு விழாவும் சேர்ந்து முப்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.

கருங்குழி பிருந்தாவனத்தை நிறுவிய யோகி ரகோத்தமா ஸ்வாமிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆராதனை விழாவில் கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்திற்கு கும்பாபிஷேகம் செய்து விட்டு பிருந்தாவனத்தின் பின்புறத்தில் உள்ள அறையில் யோகப்பிரவேசம் செய்து
தனிமையில் தம்மை ஒடுக்கிதவத்தில் இருந்து வருகிறார்.

01.09.2023 அன்று 9 ஆண்டுகள் முடிவடைந்து 10 -ஆம் ஆண்டு துவங்குகிறதுயோகி ரகோத்தமா பூட்டிய தனியறையில் யோகபிரவேசம் செய்து 12 ஆண்டுகள் தவத்தில் இருக்க சங்கல்பம் செய்து 112மாதங்கள் முடிவடைந்துள்ளது.

தன்னுடைய குருமார்களின் அன்பு கட்டளையின் பெயரில் மாதம் ஒரு முறை பெளர்ணமி நன்நாளில் மட்டும் சத்யநாராயணபூஜை செய்து காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பக்தர்களுக்கு அருள் தரிசனம்வழங்கி வருகிறார்.

கருங்குழி பிருந்தாவன் சித்தர் கடந்த 2019 ஆண்டு ஜுன் மாதம் 13 ந் தேதி 6 அடி 4 அங்குலம் உயரம் உள்ளஞானலிங்கத்தையும் 4 அடி 2 அங்குலம் உயரம் உள்ள நந்திபகவானையும் பிருந்தாவன் வளாகத்தில் பிரதிட்சை செய்து பக்தர்களுக்கு அர்பணித்து உள்ளார்.

முப்பெரும்விழாவில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவனர் கோ.ப.அன்பழகன் மற்றும் அ.தமிழ்மாறன்,
திருக்கச்சூர் ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் தமிழ் பேராசிரியர் எம்.கே.சுப்ரமணியன் எழுதிய யோகி ரகோத்தமா ஒரு மகானின் வரலாறு புத்தகம் கீதாராணி பாலசந்திரன் அவர்களின் திருகரங்களால் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஞானலிங்கத்திற்கும்,மூல பிருந்தாவனத்திற்கும் வீர ஆஞ்சநேயர்க்கும் அபிஷக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.

அதன் பிறகு மகா மங்கள தீப ஆராதனை சித்தர் கரங்களால் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு காண்பிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில்விஷ்ணு துர்கையம்மன் பிடாதிபதி
மணிபாலன் ஸ்வாமிகள்,சித்தர்காடு பட்டாபிராம் ராதாவெங்கட் சுவாமிகள்,ஒம்சக்தி அங்காளம்மன் சித்தர்பீடம் நவின்குமார் அடிகளார்,ஆகிய ஞானபெருமக்களும்
ராஜசேகர் IFS, முன்னாள் கல்வி இயக்குநர் பேராசிரியர் ராமூர்த்தி ஸ்ரீதேவி SP, கவினா DSP, சிவசக்தி DSP,தொழிலதிபர்கள் சூர்யா டெக்ஸ்டைல்ஸ் ராதிகாமோகன்,
ஆடிட்டர் குலோத்துங்கன்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சிவ.பொன். அம்பலவாணன்,கருங்குழி செயல் அலுவலர் அருள்குமார்,அரிசிஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ராமமூர்த்தி,பேருராட்சி மன்ற தலைவர் தசரதன், துணைதலைவர் சங்கீதாசங்கர்,பேருர் செயலாளர் சுந்தரமூர்த்தி,ஆகிய முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி சென்னை, பெங்களுர், கோவை,சேலம், திருச்சி, புதுச்சேரி, மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 3000 மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஞானலிங்கம் மற்றும் மகான் ஸ்ரீ ராகவேந்திரா அருளையும், கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று சென்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினையோகி ரகோத்தமா ஸ்வாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில்ஏற்பாடு செய்திருந்தனர்.
அறக்ககட்டளை நிர்வாகிகள்ஆர். துளசிங்கம் டி.கண்ணண்,
கே.ஆர்.சுரேஷ், வி.கமலகண்ணண்,பி.பரந்தாமன் முன்னிலையில் முன்னாள் இரவு முதல் நேற்று
மாலை வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *