சோழவந்தான்
சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் வயல்வெளி பகுதியில் அமைந்து அருள்பாலித்து வரும் பொன் முனியாண்டி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது பின்னர் முலவர் பொன்முனியாண்டி மற்றும் நாகம்மாள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2.ந்தேதி பிரகாஷ்சிவச்சாரியார் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
தொடர்ந்து நான்கு கால. யாக பூஜைகள் நடந்தேறிய பின்பு நேற்று 3.ந்தேதி காலை 11.15.மணியளவில் யாகசாலையிலிந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து மூலவர் பொன்முனியாண்டி மற்றும் நாகம்மாள் சுவாமிகள் மீது. புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது
பின்னர் பக்தர்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை சித்தாலங்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.