புவனகிரி செய்தியாளர் சக்திவேல்
புவனகிரி அருகே பு.கொளக்குடி கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது-
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி உடனாகிய ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது.
விழாவில் வேதமந்திரங்கள் முழங்க. மங்கள வாத்தியத்துடன் மகா கணபதி பூஜை தொடங்கி பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது யாகச் சாலையில் இருந்து புறப்பட்டு வேணுகோபால சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
அதைத் தொடர்ந்து பின்னர் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரத்தனை காண்பிக்கப்பட்டது இதில் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வேணுகோபால் பெருமானை வழிபட்டு சென்றனர் பின்னர் விழா குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
விழாவில் கிராம இளைஞர்கள்மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மருதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.