பென்னாகரம் அடுத்துள்ள சின்னவத்தலாபுரம் கிராமத்தில் ஏரியூர் காவல்துறை , தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பணி அமைப்பு ஆகியவை இணைந்து ஏரியூர் காவல்துறையினரின்சமூக விழிப்புணர்வு நிகழ்வு, இல்லங்களில் திருக்குறள் புத்தகம் வழங்குதல், தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம், பள்ளி மாணவர்களின் உரையரங்கம், கிராமப்புற மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுப்பொருள்கள் வழங்கும் நிகழ்வுகள் என ஐம்பெரும் விழாவை நடத்தியது.

நிகழ்விற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி தலைமை தாங்கினார்.
சின்ன வத்தலாபுரம் செளபரணி ரமேஷ் மற்றும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பணி அமைப்பு தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் த.சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் வெ.யுவராஜன் மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார். ” அவர் பேசுகையில் மாணவர்கள் செல்போனில் செலவிடாமல் நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும்.
குறிப்பாக உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை மதிப்பெண்ணுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என்றார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறநெறி சொல்லி தர வேண்டும் என்றார் நிகழ்வில் பள்ளி மாணவர்களின் உரையரங்கம் நடைபெற்றது .
100க்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் மற்றும் இலவசமாக எழுதுப்பொருள்கள் மர கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் இயற்கை ஆர்வலர் முத்துக்குமார், தொழிலதிபர் முருகன் ,கோகுல் காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கவுண்டப்பன், வெண்ணிலா மல்லமுத்து, மருது பாண்டி, கவுன்சிலர் சேகர் வார்டு உறுப்பினர் மாது மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.