சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களால் அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயில் பூரண கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவில் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.