பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கபிஸ்தலத்தில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயம் திருவிழா..
திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கீழகபிஸ்தலம் காமராஜர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயம் பால்குட திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி பவுண்டு காவேரி ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடம், அக்னி கொப்பரை எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை கீழகபிஸ்தலம் காமராஜ் நகர் சேர்ந்த கிராமவாசிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வீரத்தமிழர் எழுச்சி நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.