இரா.மோகன்,தரங்கம்பாடி,செய்தியாளர்.

பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு S.புயல் பாலச்சந்திரன் பொதுமக்களிடையே சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு:-

தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை( partime jobs) என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை Linked in ,indeed, Naukri.com extra….. இது போன்ற இளையதளங்களில் பதிவிடுகின்றனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி ( task ) கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.

எனவே இது போன்ற பகுதி நேர வேலை (partime jobs) இவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதேபோல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக SMS ‘ Emails , Online job website- மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும் . அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள் .

மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் 1930 ( toll free) 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும் என்றும். இதேபோல் தேவையில்லாத Link மற்றும் vedio call போன்றவற்றை தொடவேண்டும் எனவும் மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *