கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக ஏழாவது ஆண்டாக ஆவணி மாத கிருத்திகை கூட்டு வழிபாடு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் சங்கல்பம்,நாம சங்கீர்த்தனையுடன் நடைபெற்றது…
கோவையில் செயல்பட்டு வரும், கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக ஆண்டு முழுவதும்,ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வணங்கி, கூட்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
110 பேர் உறுப்பினர்களாக உள்ள பேரவை சார்பாக கல்வி,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு ,சமுதாய நல பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ,ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கூட்டு வழிபாடு நடைபெற்றது.
கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவையின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் இணைந்து ஒருங்கிணைத்த இதில்,கூட்டு வழிபாடு, சங்கல்பம் மற்றும் விளக்கேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கிருத்திகை நாதம் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடைபெற்று,சுவாமி முருகனுக்கு தீபாராதனை நடைபெற்றது.இது குறித்து பேரவை நிர்வாகிகள் கூறுகையி்ல்,இந்த கூட்டு வழிபாட்டை அனைவரும் இணைந்து நடத்துவதாகவும்,குறிப்பாக தைப்பூச நாளில் பழனிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கி வருவதாகவும்,அதன் படி கடந்த தைப்பூச தினத்தில் தனியாக மண்டபம் எடுத்து காலை ஏழு மணி முதல் இரவு வரை பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதாக தெரிவித்தனர்.
மேலும் கண்பார்வையற்ற ஏழை குழந்தைகள் எட்டு பேரை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தேவையான மளிகை பொருட்கள்,மற்றும் ஆடைகள் ,மற்றும் அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
பின்னர் அனைவருக்கும் இரவு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்,கூட்டு பேரவை நிர்வாகிகள்,உறுப்பனர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.. நிகழ்ச்சியை கிருத்திகை நாத கூட்டு வழிபாட்டு பேரவை நிர்வாகிகள் ரோஷன்,நாகராஜ், கார்த்திகேயன், அலங்காரம் என்கிற ரங்கசாமி, மணிகண்டன்,ரங்கநாதன்,சிவக்குமார்,கிருஷ்ணன்,செந்தில்,சிவராஜ்,சம்பத்,ஹேமா, ஆகியோர் ஒருங்கிணைத்தனர்…